Tuesday, 09th March, 2021
தமிழகத்தில் புதிதாக 449 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
அதிகபட்சமாக சென்னையில் 151 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,48,724 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 461 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,32,167 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 12,466 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய தேதியில் இன்னும் 4,091 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.