Saturday, 27th February, 2021
காவிரி உபரி நீரை வேறு யாரும் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
மழைக்காலங்களில் காவிரி ஆற்றிலிருந்து சென்று கடலில் வீணாக கலக்கும் நீரை தென் மாவட்டங்களுக்கு திருப்பும் வகையில், சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
இந்த திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, கர்நாடக மக்களின் நலன்கள் காக்கப்படும் என்றும், உபரி நீரை தமிழ்நாடு பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்றும் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.