Tuesday, 09th March, 2021
2021 - 22 ல் ரூ. 84,686.85 கோடி கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து வருகிறார். அதில், 2021 - 22 ல் ரூ. 84,686.85 கோடி கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிலுவையிலுள்ள மொத்தக் கடன் ரூ.5,70,108.29 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி மதிப்பீட்டில் இது 26.69% ஆக இருக்கும். கடன் அளவு 15-ஆவது நிதிக்குழு பரிந்துரைத்த இலக்கிற்குள் உள்ளதாக பட்ஜெட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.