Thursday, 04th March, 2021
தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிக்காக சென்னை எழும்பூரிலுள்ள ரைபிள் கிளப்பில் நடிகர் அஜித் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு கோவையில் நடந்த மாநில அளவிலான "ரைபிள் சாம்பியன்ஸ்" போட்டியில் அஜித் கலந்து கொண்டார். அதே போல 2019-ம் ஆண்டு டெல்லியில் நடந்த தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியிலும் அவர் கலந்து கொண்டார்.
இந்தாண்டு நடைபெற உள்ள போட்டியிலும் கலந்துகொள்வதற்காக எழும்பூர் “சென்னை ரைபிள் கிளப்” மையத்தில் நடிகர் அஜித் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ரசிகர்கள் அடையாளம் கண்டால் கூட்டம் கூடிவிடும் என்பதற்காக வாடகை காரில் கால்சட்டை, டி - சர்ட் அணிந்து வந்து நடிகர் அஜீத் பயிற்சியில் கலந்து கொள்கிறார்.