Thursday, 04th March, 2021
இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்தும் நம் கைகளில் அடங்கியிருக்கும் ஸ்மார்ட்போனுக்குள் அடங்கிவிடுகிறது. அதை பயன்படுத்தி விண்டோ ஷாப்பிங் செய்வது உலகில் உள்ள பெரும்பாலானவர்களின் வாடிக்கையாகி உள்ளது. அதேபோலதான் இங்கிலாந்தில் உள்ள இளைஞரான கேன் வில்லியம்ஸும். விண்டோ ஷாப்பிங்கில் எந்நேரமும் மூழ்கி இருப்தும், அமேசான் இ - காமர்ஸ் நிறுவனம்தான் அவரது பேவரைட்.
இந்நிலையில் அவரது பிறந்தநாளுக்கு அமேசான் பார்சல் போலவே கேக் செய்து மகனுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் அவரது பாசத் தாய் நினா ஏவான்ஸ் வில்லியம்ஸ். வழக்கமாக பிள்ளைகளின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டுவது பெற்றோரின் வழக்கம். இவர் அதையே கொஞ்சம் வித்தியாசமாக செய்துள்ளது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதனால் கேனின் 24வது பிறந்தநாள் பலரது கவனத்தை பெற்றதோடு, வாழ்த்துகளாகவும் குவிந்து வருகிறது. கேனின் அம்மா தொழில் ரீதியாக கேக் வடிவமைத்து வருபவர். நான்கு லேயர் கொண்ட சாக்லேட் கேக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.