Thursday, 04th March, 2021
வரும் வியாழன் முதல் தமிழ்நாடு அரசுப் பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். ஊதிய உயர்வு குறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படாததால் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக போக்குவரத்து சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்த வேலை நிறுத்தம் காலவரையற்ற வேலைநிறுத்தமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.