Sunday, 07th March, 2021
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி மற்றும் அவரது அமைச்சரவையின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.
புதுவையில் திங்கள்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமியின் அமைச்சரவைக் குழு தோல்வியடைந்ததையடுத்து, நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனர்.
காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க உரிமைக் கோரப்போவதில்லை என்று அறிவித்துவிட்டன. இதனால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.