Sunday, 07th March, 2021
தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் தேதிகளை முடிவு செய்வதற்காக டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது.
தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அண்மையில் தமிழகத்திற்கு வந்தபோது தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கத்திற்கு துணை ராணுவப் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லியில் இன்று தேர்தல் ஆணையர்களுடன் ஆலோசனை நடத்த உள்ள சுனில் அரோரா தேர்தல் தேதிகளை விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.