Saturday, 17th April, 2021
நடிகையும் ஆந்திர மாநில எம்எல்ஏவுமான ரோஜா கபடி விளையாடி அனைவரையும் வியப்படையச் செய்தார்.
ஆந்திர மாநிலம் நகரி சட்ட மன்ற உறுப்பினராக இருப்பவர் நடிகை ரோஜா.தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் மிகவும் முன்னணி நட்சத்திரமாக இருந்தவர். இந்த நிலையில், தமது நகரி பகுதியில், நடந்த கபடி போட்டியை தொடங்கி வைக்க ரோஜா சென்றிருந்தார். அப்போது இளைஞர்கள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதில் உற்சாகமடைந்த ரோஜா யாரும் எதிர்பாராத நிலையில், திடீரென களத்தில் இறங்கி, அங்கு விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுடன் கபடி விளையாடினார். இதனால் இளைஞர்களும் நகரி சட்டமன்ற தொகுதி பொது மக்களும் மிகவும் உற்சாகம் அடைந்தனர்.