Thursday, 19th May, 2022
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபமானவர் புகழ். குறிப்பாக குக் வித் கோமாளி 2 வது சீசனில் கோமாளியாக இவரது நடவடிக்கைகள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன.
அஸ்வின் குமார் மற்றும் புகழ் இணைந்து நடித்த என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதுமட்டுமல்லாமல் நடிகர் அஜித்தின் வலிமை, சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் படங்களிலும் புகழ் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க | நடிகை கொடூரமாக கொலை: கணவர் கைது
இந்த நிலையில் புகழ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், பிறந்த நாள் வாழ்த்துகள் பார்ட்னர். லவ் யூ என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவிற்கு சிவாங்கி, பிறந்த நாள் வாழ்த்துகள் அக்கா என பதிலளித்துள்ளார்.