Thursday, 19th May, 2022
தமிழக அரசின் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டதற்கு எம்.ஜி.ஆர் கழகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 17 அன்று தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்காக எம்.ஜி.ஆரை சிறப்பிக்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தி குறிப்பு வெளியிட்டிருந்தார். அதில் எம்.ஜி.ஆர் ஆட்சியின் சிறப்பையும், கருணாநிதி, எம்.ஜி.ஆர்க்கு இடையே இருந்த அரசியலுக்கு அப்பாற்பட்ட நல்ல நட்பையும் முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்துரைத்திருந்ததை எம்.ஜி.ஆர் கழகத்தின் தலைவர் ஆர்.எம். வீரப்பன் சுட்டிக்காட்டியுள்ளார். எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை சிறப்பித்தமைக்கு உலகெங்கிலும் உள்ள எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.