Saturday, 25th June, 2022
நியூயார்க்: அண்டை நாட்டில் இருந்து பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதாக ஐ.நா.வில் இந்தியா புகார் தெரிவித்துள்ளது. ஐ.நா.பாதுகாப்பு சபை கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, ஆப்கானிஸ்தானில் மாறிவரும் அரசியல் சூழ்நிலையால் அதன் சுற்றுப்புறத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன.
பயங்கரவாதிகள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால் அதை தடுத்து நிறுத்தும் திறன் பல நாடுகளிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார். கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் மற்றும் 2016ல் பதான்கோட்டில் பயங்கரவாதச் செயல்கள் உட்பட எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.