Saturday, 25th June, 2022
தமிழ் திரைப்பட நடிகர் மாதவன் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு அவர் தங்கியிருக்கும் ஹோட்டல் குறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் சிகப்புக் கம்பள மரியாதையைப் பெற உள்ள மாதவன் தான் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையின் ஜன்னல் வழியாக வெளிப்புறத்தில் உள்ள இயற்கை அழகை விடியோவாக பதிவிட்டுள்ளார். அந்த விடியோவில் ஹோட்டல் அறைக்கு வெளியே உள்ள அழகான பனைமரங்கள் கண்ணை கவரும் விதமாக காட்சியளிக்கின்றன.
நடிகர் மாதவனின் படமான “ ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்” கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. இது என்னுடைய வாழ்வில் மிகவும் சிறப்பான தருணம் என்று நடிகர் மாதவன் குறிப்பிட்டுள்ளார்.