Saturday, 20th August, 2022
நடிகை மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
நடிகர் ரஜினிகாந்த்தின் பேட்ட திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அடுத்ததாக நடிகர் விஜய்யுடன் இணைந்து இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.
மேலும் இன்ஸ்டாகிராமில் கிளாமர் படங்களை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். தனுஷுடன் இவர் இணைந்து நடித்த மாறன் திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது.
இதையும் படிக்க | வெற்றிப் படங்களுடன் இணைந்ததா மாமனிதன்? திரை விமர்சனம்
தற்போது யுத்ரா என்ற ஹிந்தி படத்தில் நடித்துவரும் அவர் அடுத்ததாக பிரபாஸுடன் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக டௌபா என்ற பாடலுக்கு இவர் நடனமாடியுள்ளார். இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு மாளவிகா பதிலளித்தார்.
அப்போது ரசிகர் ஒருவர் நடிகர் விஜய்க்கு கடைசியாக அனுப்பிய வாட்ஸ் ஆப் செய்தி என்னவென்று கேட்டார். அதற்கு, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.