Saturday, 20th August, 2022
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.
நடன இயக்குநராக இருந்து நடிகர், இயக்குநர் என கலக்கிக்கொண்டிருக்கிறார் ராகவா லாரன்ஸ். ருத்ரன் என்ற படத்தில் நடித்துமுடித்துள்ள அவர் அடுத்ததாக சந்திரமுகி 2 படத்தில் நடித்துவருகிறார். வாசு இயக்கும் இந்தப் படத்தில் வடிவேலுவும் நடிக்கிறார்.
இந்த நிலையில் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வினும் நாயகனாக அறிமுகமாகவிருக்கிறார். டிரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.
இதையும் படிக்க | நடிகர் விஜய்க்கு கடைசியாக அனுப்பிய வாட்ஸ் ஆப் செய்தி - மாளவிகா தகவல்
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று(ஜூன் 25) துவங்கியது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ராகவா லாரன்ஸ், தனது தம்பியை வாழ்த்துமாறு மக்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.
கடைசியாக பாலகிருஷ்ணா நடிப்பில் ரூலர் என்ற படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார், 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குநராக களமிறங்கவுள்ளார். தமிழில் லிங்கா படத்துக்கு பிறகு இவர் இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.