Thursday, 19th May, 2022
சதிஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள பேச்சுலர் திரைப்படம் கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் வருவாய் ரீதியில் இந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்றைய காலகட்டத்து இளைஞர்களின் காதல் மற்றும் காதல் சார்ந்த பிரச்னைகள் ஆகியவை குறித்து இந்தப் படம் பேசியிருந்தது. இந்தப் படத்தின் பாடல்களுக்கு சித்து குமார் மற்றும் திபு நினன் தாமஸ் இசையமைக்க, சித்து குமார் இந்தப் படத்துக்கு பின்னணி இசையமைத்திருந்தார்.
இதையும் படிக்க | தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு: லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கருத்து
இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடிக்க, இயக்குநர் மிஷ்கின் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இந்தப் படம் வருகிற ஜனவரி 21 ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.